Saturday 29 September 2012

வாடாமல்லி




என்றோ, எங்கோ மலர்ந்த மலரை அன்று அவன் நுகரும் நாள், ஆம், அன்று அவனுக்குத் திருமணம். மணமாக இருந்த ஓர் மலர் அவனுடன் திருமணமாகவிருந்தது. கொய்த மலர் வாடும், அன்றோ, கொடுத்த செடிகள் வாடி நின்றன. மணமகளின் பெற்றோர்களின் முகத்தில் சோகம், எனினும், கன்னியாயிருந்த தங்கள் மகளை கறையேற்றிவிட்டோம் என்ற சந்தோஷம். உறவுகள் வந்து வாழ்த்தின. புரோகிதர்கள் புடைசூழ, மதத்தின் புனிதமாய் நினைத்த பல புராணங்களைப் படிக்க, இவளோ பூவாக அங்கு அமர்த்தப்பட்டிருந்தாள். வேள்வியில் எழும்பிய புகை, புரோகிதர்கள் மேலும் நெய் ஊற்ற ஊற்ற அதிகரித்தது. கண்களை கரிக்கச் செய்யும் அப்புகையில் மெய்யாய் அழுதுகொண்டிருந்தாள் அவள். கண்ணீருக்குக் காரணம் புகையே என மற்றவர் நினைக்க அது அவளுக்குச்  சாதகமாயிற்று.  உடைந்த மணதுடன், விலை உயர்ந்த  உடையுடன் அவள் அமர்ந்திருந்தாள். உடைந்த அவளது உள்ளத்தின் அங்கலாய்ப்பினை வீட்டுக்கும், ஊருக்கும் தெரியாதபடி புதைத்து வைத்திருந்தாள். தனது மன விருப்பத்தை வெளியிலே சொல்லாமல், விடையை எதிர்பார்த்துக்கொண்டிருந்தாள். போதும் என்ற அளவிற்கு புகையும், புராணமும் முடிந்த பின்னர், மணவறைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது, அவளுக்குள்ளே உண்டானது மயான அமைதி. பெற்றோரை மிஞ்சி பேசியவள் அல்ல, ஆனால் பெற்றவர் தருவது நஞ்சாக இருக்குமோ என்ற பீதி அவளுக்குள். ஆம், எதற்காக தான் அடிக்கடி பெற்றோரால் கட்டுப்படுத்தப்பட்டாளோ, அப்படிப்பட்ட தோழிகளோடே சுதந்திரமாய் சுற்றித் திரிய மறுக்கப்பட்டாளோ, கட்டும் நபரும் பெற்றோரைப் போலவே இருப்பாரோ! என்ற கேள்வி.
 
மேடையில், பலர் வந்து பரிசளித்து, புகைப்படம் எடுத்து விடைபெற்றுச் சென்றுகொண்டிருந்தார்கள், இவளோ அவனுடனேயே நின்றுகொண்டிருந்தாள், ஆம், அதுதானே நியதி. படித்திருந்தாலும், பதவியிலிருந்தாலும், பயத்தின் ஊடே சிந்தித்துத்தான் சிரித்துக்கொண்டிருந்தாள். உடன்கட்டை (உடன் கணவன்) ஏறிவிட்டோம், இனி என்ன வந்தாலும் பார்த்துக்கொள்வோம் என தன்னைத் தானே அமைதிப்படுத்தியும் இயலாதுபோன நேரம் அது. திருமணம் முடிந்ததும், மணவறையின் அலங்காரங்களை சிறார்கள் பிய்த்தெறிந்துகொண்டிருந்தனர், ஆம், அவைகள் இனி தேவை அற்றவையே. அடுத்து களையப்படுவது இவளது அலங்காரமே! திருமணத்தன்று காலையில் வந்த கூட்டம் மாலையில் விடைபெற்றது, கழுத்தில் கிடந்த மாலைகளும் கழற்றப்பட்டன, அதற்கு முன்பே மாலையில் இருந்த பல மலர்கள் அவளுக்குத் தெரியாமல் மாலையிலிருந்து விடைபெற்றிருந்தன. கொண்டையில் சூடியிருந்த பூங்கொத்தினை பறித்து எடுத்தபோது அது வாடியிருந்ததையும், நசுங்கியிருந்ததையும் கண்டு கடவுளே எனது வாழ்வு இப்படி ஆகிவிடக்கூடாது என வேண்டிக்கொண்டாள். உறவினர் விடைகொடுத்தபின், பெற்றோரைப் பிரியும் வேளை. அப்போது, இரவு இரண்டு மணி தூரத்திலேயே நின்றுகொண்டிருந்தது.
 
பகலுக்கு விடைகொடுத்து, படுக்கை அறைக்குள் நுழைந்தபோது பதபதைத்தது அவள் மனது. ஒருமுறை கூட அவனிடம் பேச பெற்றோர் வழி தர வில்லையே என்ற எண்ணத்தில், அவளது உதடுகள் அதுவரை மூடியேகிடந்தன. மௌனமும், அவன் எதைச் சொன்னாலும் செய்வதும்தான் அவனுக்கு அவள் அப்பொழுது அளித்த பதில். இரவுக்குத்தான் அவன் முன்னுரிமை கொடுக்கிறானோ! என்ற எண்ண ஓட்டத்தில் அவனைக் கணித்துக்கொண்டிருந்தாள். தன்னையும், அவனையும் அறிய அதற்கு முன் எனக்கு ஒரு தருணம் கிடைக்குமா? அறிமுகத்திற்கு முதலிடம் கொடாமல், அதற்கு முதலிடம் கொடுத்தால், அவனுக்கு நானல்ல, அதுவே முதல் என்ற தீர்மானத்தோடு நின்றுகொண்டிருந்த அவளை அழைத்தான் கணவனட. எல்லையைத் தொட்டுவிட்டோம், இனி எதைத் தொட்டால் என்ன? என்ற தைரியம் ஒரு புறம் இருந்தாலும், மொட்டாய் வீட்டில் இருந்த ஞாபகம், காலம் தன்னை மலரச் செய்ததின் கனவு, கல்லூரி மாணவிகளுடன் உலாவந்த உற்சாகம் எல்லாம் அப்போது நினைவில் வந்தது.
 
அவளது, தோழியின் வாழ்க்கையினை நினைத்த அவள், தனது வாழ்க்கையிலும் தோல்வியின் களை முளைத்துவிடுமோ! என்று பயந்துகொண்டிருந்தாள். அவளது தோழி காதலித்து மணமுடித்தவள், பெற்றோரை மதியாமல் கழற்றிவிட்டு காதலித்தவனையே கடவுளாக நினைத்து ஓடிச் சென்றவள். திருமண உறவு தொடங்கிய பின்னர், மோசமான குணம் கொண்ட கணவனைக் கண்டதிர்ந்து, தன் உயிரை மாய்க்க நினைத்தவள். அப்போதெல்லாம், அவளைத் தொடர்பு கொண்டு மனக் காயம் ஆற்றிக் காப்பாற்றியவள் இவள். இன்றோ, தோழிக்கு முன் எனது வாழ்க்கை எப்படி இருக்கப்போகிறதோ? என நினைத்து நினைத்து குழம்பியிருந்தாள். பலமுறை தோழியின் தோல்வி வாழ்க்கையைக் இவளது வார்த்தைகள் காப்பாற்றியது, அப்போது இவள் திருமணம் ஆகாத கன்னி.
 
'ஏண்டி கவலப்படுற? நாங்கல்லாம் என்ன செத்தா போயிட்டோம், வர்ரது வரட்டும் பாத்துக்கலாண்டி, நீ ஏன் சாகணும்' என்று தோல்வியின் சோகம் தணிய தோழியிடம் தான் பேசிய வீர வசனங்கள் இவள் நினைவுக்கு வந்தது. 'உனது திருமணத்திற்கு என்னால வரமுடியலடி' என்று தோழி சொன்னபோது, 'என்னடீ ஒன்னோட ஆத்துக்காரரு, தோழியான எனது கலியாணத்துக்குக் கூட வரவிடமாட்டிங்காரா?' எனக் கேட்டாள். தோழியோ, 'என்னத்தடி சொல்ல, அவரோட வாழவிடுறாரேன்னே நான் சந்தோஷப்படுறேன், இதுலவேர ஓன்னோட கலியாணத்துக்கு வரவிடலங்கிற வருத்தத்த கூட்டிக்கிட்டேன் அவ்வளவுதான்.' 'பெத்த புள்ள முன்ன இருக்கயில கூட செத்துப்போன்னு பேசுறாரே, இவரு கொடுத்த லவ் லட்டர அன்னிக்கு முத்திக்கிட்டேன்டீ, இன்னைக்கு மொத்துரான். காவாலிப் பசங்களை எல்லாம் கல்லூரியில சேத்ததால, கன்னி நம்மதாண்டி பாழாயிட்டோம.;' ஊட்டுக்குள்ள அவரு நுழையச்சுல எல்லாம் என் மனசு 'வாடா...மல்லி' (வாடா கொத்தமல்லியைப் போன்ற சின்னப் புத்தியுள்ளவனே) என்னுதான் சொல்லுது, 'என்னன்னாலும், கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஷன்னு கடமையைச் செய்யுரேன்டீ என்ன செய்ய'. 'அவரு புல்லாக குடித்துவரும்போது கடமையைச் செய்ய கஷ்டமாயிருக்கு, அப்பந்தான் செத்துடுவோம்னு தோணும்' என தான் செய்த தவறுக்காக, அநீதி இழைத்தது உலகமே என விட்டுக்கொடுக்காமல் பேசிக்கொண்டாள். 'வூட்ட உட்டு ஓடிவந்துட்டபின்னால நான் இவரோட பட்ட பாட்ட, தனியா பாடுர பாட்ட கடவுள் மட்டுந்தான்டி கேக்கமுடியும், அதுவும், கடவுள் கேட்கிறாரா இல்லையாங்கிற சந்தேந்தான்டி. கோயில்ல மணி அடிச்சாலும் நம்ம காதுல நல்லா கேக்குது, ஆனா கடவுளுக்கு கேட்குதோ இல்லையோ... போதும்' என்று அலுத்துக்கொண்டாள் அவள். என்னமோ, ஏதோ ஒன்னோட வாழ்க்க என்னோடதப்போலாவக் கூடாது, நீ நல்லா இருக்கணும்டீ, எல்லாருக்கு நல்லது செய்ஞ்ச, அறிவுர சொன்ன, நீ சொன்னவரத்தான் என்னால ஏத்துக்க முடியல, அவர ஏத்துக்கிட்டிருந்தா இப்படி நடந்திருக்காதோன்னு சில நேரம் நினைப்பேன், இனிம நினைச்சி என்னடி செய்ய? எனது வழியிலேயேதான் போறேன், வலி என்னைக்கு மாறுமோ!!! என உளத்திப் பேசின தோழியை மீண்டும் உறுதிப்படுத்தியவள் இவள்.
 
இரவில் இவளை கணவன் அழைத்தபோது, அருகிலே வந்தாள். அமரச்சொன்னபோது மௌனித்தமர்ந்திருந்தாள், உள்ளத்திலோ அலறல் இருந்தது. மணமேடையில் எல்லாருக்கும் முன்னாக அமர்ந்திருந்தபோது சற்று இருந்த ஆனந்தம், இங்கு யாருமே இல்லாததால் அதுவும் அற்றுப்போயிருந்தது. கணவனது தொடக்க வார்த்தைகளைக் கேட்க இவளது காதுகள் துடித்துக்கொண்டிருந்தன. அறை வாசலும் யாருக்கும் வழிவிடாதபடி கதவினால் அடைக்கப்பட்டது. உள்ளே நுழைந்ததும், படுக்கை அறை ஒரு பூஜை அறையைப் போலவே காட்சியளித்தது. கடவுளின் கைகளில் இருவரையும் ஒப்புக்கொடுப்பது போன்ற பிரம்மையால், பெற்றோர்களால் உருவேற்றப்பட்ட கோலம் அது. எல்லையைத்தாண்டி பிள்ளைகளோடு தாங்கள் இருக்கமுடியாத இடத்தில், பெற்றோர்கள் தங்கள் கடவுள்களை இருத்தியிருந்தார்கள்.
 
இயேசுவை அறியாத குடும்பத்தில் விக்கிரகங்களை வணங்க பெற்றோர்களால் வளர்க்கப்பட்டு வளைக்கப்பட்ட அவன், அழையில் நுழைந்ததும் சற்றமர்ந்து, பின்னர் எழுந்து ஒரு பெரிய போர்வையினை கையிலெடுத்து அங்கிருந்த பூஜை பொருட்கள் அனைத்தின் மேலும் விரித்தான். இவளோ, பொன்னாடை போர்த்தி மரியாதை செய்கிறாரா, அல்லது தங்களைக் காணாக்கூடாதபடி அவைகளை மூடுகிறாரா என நினைத்து கணவனை நிதானித்துக்கொண்டிருந்தாள். திரும்பி வந்தமர்ந்து பேசிய அவன், 'டார்லிங், எனங்கு இதுல நம்பிக்க இல்ல, ஒரு காலத்துல இருந்திச்சி. ஆனால், நான் கல்லூரி படிக்கும்போது, உடன் படித்த மாணவன் ஒருவன் 'இயேசு' என்பவரை எனக்கு அறிவிக்க, தொடக்கத்தில் எதிர்த்த நான், பின்னர் சுவைத்து இயேசுவுக்கு என்னை அர்ப்பணித்துவிட்டேன், இன்று அவரது சொந்தப் பிள்ளை. இதனை என் பெற்றொருக்கு நான் இதுவரை அறிவிக்கவில்லை, மறைமுகமாக வாழ்ந்துவிட்டேன், மனைவி நீ, உன்னிடத்தில் இனி என்னால் மறைக்கமுடியாது, மறைத்து வாழ்வைத் தொடங்கமுடியாது, அது குடும்பத்தையே இடித்துவிடும், எனவே, முதலிலேயே உனக்கு தெரிவித்துவிட்டேன். திருமணத்திற்கு முன் உன்னோடு பேச நினைத்தேன், வழி கிடைக்கவில்லை, பெற்றோரும் வழி திறக்கவில்லை. இயேசுவை ஏற்றுக்கொண்ட பெண்தான் வேண்டும் என்ற ஆசை எனக்குள் இருந்தது. ஆனாலும், அதனை பெற்றோரிடம் சொல்லாமல், அவரே அதைத் தரட்டும் என விட்டுவிட்டேன். திருமணம் பேசி முடிந்தபோது, இயேசுவை அறியாத ஒரு பெண்ணுடன் எனது வாழ்வு தொடங்கப்போகிறதே எனத் தடுமாறினேன், எனினும், உடன் அவர் இருப்பதால் உறுதியானேன். பெற்றோரிடம் சொல்லியிருக்கவேண்டும், நான் இயேசுவை ஏற்றுக்கொண்டதே தெரியாதே, இந்நிலையில் இதைத் தெரிவித்தால் என்னாகுமோ என இருந்துவிட்டேன். சொல்லாதது எனது தவறுதான் என சற்று தன்னைத்தான் நொந்துகொண்டு, நான் பாவங்களை அறிக்கையிட்டு இயேசுவின் இரத்தத்தினால் கழுவப்பட்டு, இரட்சிக்கப்பட்டு, ஞானஸ்நானம் பெற்றவன். உன்னை நான் தவறாக நினைக்கமாட்டேன் வற்புறுத்தமாட்டேன், எனது வாழ்க்கையின் மூலமாக நீ இயேசுவைப் புரிந்துகொள்ளும்போது, உனக்கு மனம் வரும் அப்போது தெரிந்துகொள் என்ற பெருந்தன்மையாக, இயேசுவை ஏற்றுக்கொள்வதற்கான மறைமுகமான அழைப்பினை அவளுக்கு விடுத்தான்.
 
இவளுக்கோ, நிலவைத் தேனில் நனைத்துக்கொடுத்தது போன்ற உணர்வு, நிலை தடுமாறினாள், நடக்காது என நினைத்தேன் நடந்துவிட்டது, ஆம், திருமணம் பேசத் தொடங்கிய நாளிலிருந்து அவளது பயமும் அதுதான். இயேசுவை அறிந்த எனக்கு இயேசுவை அறிந்தவர் வேண்டும் என்று எண்ணித் தவித்து, சொல்லத் தைரியமில்லாதிருந்த அவளை, இயேசுவை அறிந்தவருடன் இறைவனே இணைத்ததை நினைத்து நினைத்து, ஆனந்தத்தில் அப்படியே மூர்ச்சித்துவிட்டாள்.
 
அவள்மூர்ச்சித்ததைக் கண்டு அதிர்ச்சியுற்ற கணவனோ, திருமணம் ஆன அன்றிரவே இதனைச் சொன்னது தப்பாயிற்றோ? காலம் சென்று சொல்லியிருக்கலாமோ? பக்தியில் முத்தினவளாக இவள் இருந்திருப்பாளோ, எனது வார்த்தையினால் அவனது மனம் இடிந்துபோனதோ என நினைத்து, நீர் தெளித்து, பானம் கொடுத்துத் தேற்றி, பேசும் அளவிற்குத் தூக்கி அமர்த்தி, 'மன்னித்துவிடு, நான் சொன்னது உன்னை பாதித்துவிட்டது என நினைக்கிறேன்' என்றான்.
 
தன்னிலைக்கு வந்த அவள், நான் இயேசுவை சிறுவயதிலேயே ஏற்றுக்கொண்டேன், கல்லூரி நாட்களில் தோழிகளுக்கும் இயேசுவை அறிவித்துவந்தேன். 'வீட்ல சொல்லிப்புடுவோம்' என என்னோட தோழிங்க பயமுறுத்துவாங்க. கட்டுப்பாடான வீட்டுக்குத் தெரியாமல் கர்த்தரைத் தொழுதவள் நான். அடுத்த தெருவுல இருக்கிற அக்காதான் என்னோட ஆவிக்குரிய வாழ்க்கைக்கு அஸ்தியாரம் போட்டவர்கள், ஊழியர் ஒருவரிடம் ஞானஸ்நானம் பெற்றேன், அப்போது நானும் அந்த அக்காவும் மட்டுமே சென்றிருந்தோம். வாழப்போகும் கணவன் இயேசுவை அறிந்தவனாயிருக்கவேண்டும், இல்லையேல் எனது வாழ்க்கையே முறிந்து விழும் என்பதை சொல்லக்கூடாத அளவிற்கு ஊமையாக்கியிருந்தது எனது வீட்டின் பக்தி வைராக்கியமும், பயமும் என்றாள். பெற்றவர்கள் செய்யாததை சிலுவையில் பெற்ற அவர் செய்துவிட்டார் என்ற மகிழ்ச்சியின் நிகழ்ச்சிதான் நான் மூர்ச்சித்தது என்றாள். கணவன், தனது தனது பெட்டியிலிருந்த வேதாகமம் ஒன்றை வெளியே எடுத்துக் காட்ட, குடும்பம் இயேசுவின் குடும்பமானது. இருவரும் இணைந்து அந்த வேதாகமத்தில் கையொப்பமிட, அவர்களது திருமணம் பரத்தில் பதிவானது. இரவில் இருவரும் இயேசுவைத் தொழுதார்கள். சுதந்தரமற்றுக் கிடந்த இவர்களுக்கு குடும்பமே சுதந்தரமானது, அது இயேசுவுக்குச் சொந்தமானது. அந்த குடும்பம் ஓர் 'வாடாமல்லி'. ஏமாந்தது போன்ற உணர்வு இருவரின் பெற்றோருக்கும் வராதிருக்க, 'நீங்களும் அவரை அறிந்துகொள்ளுங்கள்' என அழைத்தது இவர்களது வாழ்க்கை, வாழ்க வளமுடன்.
 
நான் உன்னை விட்டு விலகுவதுமில்லை,
உன்னைக் கைவிடுவதுமில்லை - பைபிள் (யோசுவா 1:5)
 
மலரே நீ எங்கே இருந்தாலும்,
மாலை தொடுப்பவர் அவர்தான்
 







Friday 21 September 2012

Friday 13 April 2012

தனவதி


தனவதி


அது ஒரு மாலை நேரம். காட்டுப் புறத்தில் தன்னைத் தானே காப்பாகக் கொண்டு அமைந்திருந்தது அந்தத் தனி வீடு. எட்டிக் கூப்பிடும் தூரத்திலும், எட்டிப் பார்க்கும் தொலைவிலும் வீடுகள் வேறேதும் இல்லாத நிலையில் அமைதியில் துயிலுறங்கிக்கொண்டிருந்தது. சாலைகளில் ஓடும் வண்டிகளின் சத்தம், பயணிகளின் அலசடி, கடைத்தெரு வீதிகளின் சலசலப்பு என அத்தனைக்கும் தன்னை விதிவிலக்காக்கிக் கட்டப்பட்டிருந்தது

அந்நிய நாட்டிற்கு அன்று அடிமைப்பட்டிருந்தாலும், அந்நியர் வியக்கும் வீட்டின் விதிகளைக் கொண்டது இந்தியா என்பதற்கு அடையாளமாக வாழ்ந்துகொண்டிருந்தாள் தனவதி. மெலிந்த உருவம், எண்பத்து ஒன்பது வயதினைத் தாண்டி தொண்ணுரைத் தொடும் நாள் அது. அன்று காலைப் பொழுதில், நான்கரை மணிக்கெல்லாம் விழிப்புத் தட்டியது. உறக்கத்தைக் களைந்து, வீட்டு வேலைகளைத் தொடங்க இன்னுஞ் கொஞ்சம் நேரமாகட்டுமே என கட்டிலில் படுத்தே கிடந்தாள். பொழுது விடியும் வரைப் பொறுமையாயிருக்க அவளது மனது பொறுத்துக்கொள்ளவில்லை. கிராமத்தில் பிறந்து வளர்ந்தவள், கருக்கலில் எழுந்து வீட்டு வேலைகளைச் செய்யத் தாயினால் பழக்கப்படுத்தப்பட்டவள். பிறந்த வீட்டிலிருந்து புகுந்த வீடு வந்தபோதும் அந்தப் பழக்கத்தை தனது தனித்தன்மையாகக் காத்துவந்தவள் தனவதி. பிறந்த வீட்டிலிருந்து புருஷனோடு வாழ தனிக்குடித்தனம் போனபோதிலும், அப்பழக்கத்திற்கு அவள் அடிமைப்பட்டவள்;. ஒண்டியாருந்தாலும் ஒழுக்கத்தைத் தனவதி தக்கவைத்துக்கொண்டிருந்தாள்.  வட்டில் விளக்க குளித்துவிட்டு அன்றைய தினத்தைத் துவக்கும்படி ஆயத்தமானாள் தனவதி. உதவிக்கென்று வீட்டில் யாருமில்லை.  மண் தரையில் வைக்கப்பட்டிருந்த மண்ணெண்ணை விளக்கை அணைக்கக் குனிந்தாள். அதற்கு மேலே ஒரு ஆணியில் அவளது கணவனின் புகைப்படம் தொங்கிக்கொண்டிருந்தது. விளக்கை வாயினால் ஊதி அணைக்கக் குணிந்த தனவதியின் தலையில் ஆணியில் தொங்கிக்கொண்டிருந்த அந்த புகைப்படம் உதிர்ந்தது. கணவனின் படம் தலையில் விழ, லி  எடுத்தாலும், புருஷனின் புகைப்படைத்தை தலையில் விழுந்த பூவாகத்தான் அவளது மனது நினைத்தது. சட்டென கணவனைப் பற்றிய நினைவு அவளுக்கு

தன்னை நேசித்த வாலிபன் ஒருவனின் அன்புக்கு தன்னைப் பறிகொடுத்து, பெற்றோர் வற்புறுத்தியும் பிடிவாதத்தினால் அவனையேக் கைப்பிடித்து வாழ்ந்தவள் தனவதி. திருமணமாகி இருபத்திரெண்டாம் நாள் இல்லத்தை விட்டு இராணுவப் பணிக்குச் சென்றான் கணவன். வாய் நிறையப் புண்னகையோடு போய்வாங்க என மனதில்லையென்றாலும், விடை கொடுத்து அனுப்பினாள். பணிக்குச் சென்ற பதினைந்தாம் மாதம் அன்று தீடீரென தனவதியினை அருகாமையிலிருந்த அரசு அலுவலகத்தின் அதிகாரி இருவர் தேடி வந்தனர். வீட்டு வாசலில் வந்து மௌமாக நின்றுகொண்டிருந்த அவர்களை யாரென்று அறியாமல் ஏற இறங்க பார்த்து திகைத்துப் போனாள் தனவதி. ஏனென்றால் அவளைத் தேடி உதவிக் கென்று கூட யாரும் இதுவரை வந்ததில்லை. வந்தவர்களை வீதியில் நிறுத்தாமல், வீட்டிடை ஒட்டி வெளியே கட்டப்பட்டிருந்த மண் திண்ணையில் தேடி வந்த அதிகாரிகளை உட்காரச் சொல்லிவிட்டு, தாய் தன்னைப் பழக்கப்படுத்தியபடியே, அவர்களிடத்தில் செய்தியைக் கூட கேட்காமல், விவரம் ஏதும் அறியாமல், வீட்டுக்கு உள்ளே ஓடி இரண்டு செம்புகள் நிறைய தண்ணீர் மொண்டு வந்து கொடுத்தாள். வந்தவர்களோ நின்றுகொண்டேயிருந்தார்கள், தண்ணீரைக் குடிக்கக் கொடுத்தும், குடிக்க மனதில்லாமல் தன்னையே அவர்கள் பார்த்துக்கொண்டிருப்பதைக் கண்டு பதபதைத்தாள் தனவதி. வந்த விசயம் என்ன? என்று தனவதி கேட்கும் முன்னே, வந்தவர்களின் வாயிலிருந்து விசயம் வெளிவந்தது, அது தவதிக்கு விசச் செய்தி. உனது கணவன் போரில் வீர மரணம் அடைந்துவிட்டார் என்ற செய்தியே அது. அதிகாரிகளின் செய்தியினைத் தொடர்ந்து, இரண்டு தினங்களில் விமானத்தில் வந்தடைந்தது கணவனது உடல், ஒப்படைக்க அதிகாரிகள் வருவது அறிவிக்கப்பட்டு, வாசலுக்கு வெளியிலேயே காத்துக் கிடந்தாள். விபரம் அறியாமல் அன்று இரண்டு செம்புகளில் தண்ணீர் கொடுத்த தனவதி, இரண்டு கண்களிலும் கண்ணீரோடு கணவனின் உடலை அதிகாரிகளின் கையிலிருந்து வாங்கிக்கொண்டாள்

அருகாமையிலிருந்த கிராமத்தினர் அனைவரும் புடைசூழ வந்தனர். துப்பாக்கியுடன் அநேக இராணுவ வீரர்கள் கணவனது உடலைச் சூழ்ந்து நின்றனர். வேடிக்கை பார்த்தோர் ஒரு பக்கம், ஆனால் தனவதியின் மனதோ வேதனையின் பக்கம். கூட்டத்தின் நடுவே தனது தாயும் தகப்பனும் நிற்பதையும் அவளது கண்கள் கண்டன. அரசு வண்டிகள் பல வர, அரசாங்கச் செலவில் அத்தனை ஏற்பாடுகளும் செய்யப்பட, மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.மதிவாணனும் தனவதியின் வீட்டில் ஒழுங்குகளைக் கவனித்துக்கொண்டிருந்தார். கணவனின் பிணத்துக்கு முன்னே அவள் நின்றது அவளும் இராணுவப்படையில் அங்கம் என்பதைப் போன்ற எண்ணத்தையே சூழ்ந்து நின்றோரின் நினைவலையில் சுற்றிவந்தது. போர்த்திக்கொண்ட போர்வையையே போரில் பறிகொடுத்துவிட்டு அவள் நின்றுகொண்டிருந்த காட்சி அங்கு நின்ற வீரர்களின் வீரத்தையும் கலைத்தது. இத்தனைக்கும் மத்தியில், அரசு மரியாதையுடன் வீட்டை விட்டு தனது கணவனின் இறுதி ஊர்வலம் புறப்பட, தனவதியும் புதைக்கும் இடம் வரைச் சென்று கணவனுக்கு விடைகொடுத்துவிட்டு வீட்டுக்கு வந்து சேர்ந்தாள். தான் நம்பியிருந்த, கணவனையும் தரைக்குத் தாரை வார்த்துவிட்டுத் தனியாகவே வாழ்ந்தாள் தனவதி. அப்போது அவளுக்கு வயது இருபத்து மூன்று. கணவன் பிணமானபின்னும், கணவன் இறந்ததற்கான அரசு உதவிப் பணம் அவளை மாதாமாதம் தேடி வந்ததால், தனது வாழ்க்கையைக் கழித்துக்கொண்டிருந்தாள். கணவன் இறந்தபோதிலும், மறுமணம் செய்யாமலேயே வாழ்க்கையை கடத்தினாள்

கணவனது புகைப்படம் தனது தலையின் மேல் விழுந்தபோது, இத்தனை நினைவுகளும் அலையலையாய் அவளது நினைவில் வந்து சென்றன. அந்தப் புயலில் அவளது மனம் சிக்கித் தவித்தது. பாசத்துக்கு அவள் பாடப்புத்தகம், அவளைத் தேடி தாய் வர மறந்தாலும், குருவிகள், நாய்கள், பூனைகள் என பல விலங்குகள் அவளுக்குச் சொந்தக்காரர்களாகி தினந்தினம் அவளைத் தேடி வந்தன. அவைகளுக்காக இவளும், இவளுக்காக அவைகளும் காத்திருந்த காட்சி, இறைவன் அமைத்துக்கொடுத்த பந்தம், அதிலே சற்று கிடைத்தது அவளுக்கு ஆனந்தம்

தொட்டில் பழக்கத்தை சுடுகாடு மட்டும் கொண்டு சென்றாள் தனவதி, ஆனால், அவளது வீட்டில் தொட்டில் ஆடாது போயிற்று. தொட்டிலில் ஆட்டியவர்களும் அவளைத் தேடாது மறந்துவிட்டனர். சொத்தை விட்டுச் சென்ற புருஷன் அவளது வயிற்றில் வித்தை விட்டுச் செல்லாது போனான். வித்தில்லையானாலும் விதவையாய், வயதாகி அந்த வீட்டைத் தனது இறுதியாக்கி யாரும் துணைக்கில்லாதவளாக, தனியாகவே உயிர் நீத்தாள், இருபத்து மூன்றே வயது, மற்றொருவனுடன் வாழ வயதிருந்தபோதிலும், தொண்ணூற்றொன்பது வயதுவரை வாழ்ந்து தரைக்குச் சொந்தமானாள் தனவதி. அனாதையாய் இறந்து கிடந்த அவளையும் அரசாங்கமே அடக்கம் செய்தது. இறந்தது கூட தெரியாமல் வாழ்ந்த அவர்களது பெற்றோர்களால் அவள் இறுதி மூச்சு விடுவதைப் பார்க்க முடியாமல் போயிற்று. காதலித்து அவள் கட்டிய கணவனுக்காக கண்களை அடைத்துக்கொண்டு, பெற்றவர்களே அவளை அனாதையாக்கியிருந்தனர். பலமுறை பெற்றோரைத் தேடிச் சென்றபோதிலும், 'போடி' என்று விரட்டியடித்த அவர்களால் வாடிப்போய் வாழ்ந்தாள் அவள். தவறு செய்துவிட்டேன் என்ற நினைவு அவளுக்கு. முடிச்சு போட்டதற்குப் பின், கணவனும் முடிந்துபோனதற்குப் பின் தான் திருந்திவிட்டதை பெற்றோருக்கு காட்டியும் அர்த்தமில்லையே. காதலுக்கு எதிரான வைராக்கியம் பெற்றோருக்கு, தனவதி கணவனை இழந்த பின்னும் அவளை வாழவைக்க மனதற்றவர்களாகிப்போயிருந்தார்கள். தவறிப்போய்விட்டாலும் பிள்ளை என ஒரே மகளை ஏற்றுக்கொள்ள மனதற்ற தனவதியின் தாயை, உலகம் பிள்ளை பெற்ற மலடியாகவே பார்த்தது. விட்டுக்கொடுக்காததால் உறவு பட்டுப்போனது. கணவன் இழந்த விதவை, பெற்றோரிருந்தும் அனாதை தனவதியின் நிலை இது. கருவறை கொடுத்தவர்கள் மறந்துவிட்ட அவளை கல்லறை இடம் கொடுத்து ஏற்றுக்கொண்டது

மனதைக் கொடுத்து மனிதனை வாங்கி
மனிதனை இழந்து மனது வீங்கி
பெற்றவரையும் பிள்ளையற்றவராக்கி
பிள்ளையானாலும் பெற்றோரற்று
மற்றோர்க்கு முன் மரணம் 
இது காதலில் தனவதிக்குக் கிடைத்த சன்மானம்

Thursday 23 February 2012

நிஜமாகாத நிழல்


நிஜமாகாத நிழல்





அப்பா அன்று திட்டிய வார்த்தையினை ரவியினால் பொறுத்துக்கொள்ளவே முடியவில்லை. அப்போது அவனுக்கு பதினேழு வயதுதான் என்றபோதிலும், தான் செய்த ஒரு சிறிய தவறுதலுக்காக இப்படி தன்னை தனது நண்பர்கள் அறிய அத்தனை உரத்தக் குரலில் ஊரறிய தந்தை உறுமிக்கொண்டிருக்கிறாரே என ரவி பொறுமிக்கொண்டிருந்தான். ஆற்றிற்குச் சென்று குளிக்கக்கூடாது என்ற அப்பாவின் கட்டளையினை மீறியதால் வந்த விளைவினை தண்டணையாக அனுபவித்துக்கொண்டிருந்தான் ரவி. ஒரு புறம் தந்தை அடிக்கும் அடிகளைச் சகித்துக்கொண்டிருக்க அவனுக்கு பெலனிருந்தபோதிலும், அதனை நண்பர்கள் பார்க்கின்றதை அவனால் சகிக்க முடியவில்லை. உடன் பிறந்த சகோதரர்களும் அப்பாவின் கைக்குத் தன்னைத் தப்புவிக்காமல், தன்னைப் பார்த்து ரசித்துக்கொண்டிருக்கின்றனரே என்ற வெறுப்பும் அவனுக்குள் நெருப்பாய் கிளம்பியது. அப்போது ஓடிவந்தாள் அவனது மூத்த தமக்கை, 'போதும் விடுங்க, ஏதோ ஒரு நாள் தெரியாம ஆத்துல குளிக்கப் போயிட்டான், இனிம போக மாட்டான்' என்று அப்பாவிடம் அவள் பேசியபோது சற்று அடங்கியது அவன் கோபக் கனல். 

அப்பாவிற்குப் பயந்து தண்டனையை அனுபவித்துக்கொண்டு வீட்டு முற்றத்தில் நின்றுகொண்டிருந்த ரவியின் மனது சிறகடித்து தன்னோடு சேர்ந்து ஆற்றிற்கு வந்த நண்பர்களின் வீட்டிற்குப் பயணமானது. அவனது வீட்டிற்கு அருகாமையில் உள்ள ஒரு நண்பனும் இவனோடு சேர்ந்து அதே ஆற்றில் குளித்தவன், என்றபோதிலும் அவனது தந்தை அவனைத் தண்டிக்காததைக் கண்டு இடிந்துபோயிருந்தான் ரவி. ஏன் எனது தந்தை மட்டும் என்னைத் தண்டிக்கின்றார்? என்ற கேள்விக்கு விடை தெரியாமல் திணறிக்கொண்டிருந்தது அவனது மூளை. நான் அந்தக் குடும்பத்தில் மகனாகப் பிறந்திருந்தால் எத்தனை நலமாக இருந்திருக்கும் என நிஜமாகாத நிழலைக் கனவாகக் கண்டு நொந்துகொண்டிருந்தான் ரவி. ஒரு குற்றம் செய்ததற்காக, தான் முன்னே செய்த எத்தனையோ குற்றங்களை ஞாபகப்படுத்தி ஞாபகப்படுத்தி தந்தை எரிந்து விழுவதைக் கண்டு ரவியின் மனது முறிந்துகொண்டிருந்தது. குடும்பத்தின் மேல் கோபமுற்று வெளிNயினால் மட்டுமே விடுதலை என்ற முடிவினை எடுத்தான் ரவி. 

அது ஒரு மாலை நேரம், தனது தெருவில் ஆலய மணி ஒலித்துக்கொண்டிருந்தது, ரவியின் தாய் மாலை ஆராதனைக்கு ஆயத்தமாகிக்கொண்டிருந்தார். 'கோயிலுக்கு வரலியா?' என்ற தாயின் கேள்விக்கு 'போம்மா வாரேன்' என்று சாதுரியமாகப் பதில் பேசி தப்பிக்கொண்ட ரவி, அந்த நேரத்தில் வீட்டிற்கு விடைகொடுத்துவிட்டு பயணமானான். எப்படியோ கையில் கிடைத்த காசு கொஞ்சம், அதனை ஒரு துணிப்பையில் பத்திரமாய் பொதிந்து வைத்துக்கொண்டு வெளியேறினான் வீட்டைவிட்டு. வழியில் அவனைக் கண்ட முதியவர் ஒருவர், அவனிடம் 'தம்பி எங்க போற, வீட்ல சொல்லிட்டுத்தான் போறியா?' என குறுக்கிட்டபோது, சினம் வந்தபோதிலும் சிரித்து மழுப்பிக்கொண்டு பேருந்து நிலயத்தை அடைந்தான் ரவி. எங்கு போவது? என்ன செய்வது? என அறியாமல் வெறுமையாய் இருந்தது ரவியின் மனது. எதை எதையோ நினைத்துக்கொண்டு இரவு பேருந்து நிலையத்தை அடைந்த ரவிளூ அங்கும் என்ன செய்வது என அறியாதவனாய் தொடர்ந்து பயணிக்க விரும்பி, எப்படியோ ஒரு சுற்றுலா ஸ்தலத்தைச் சென்றடைந்தான். இரவு நேரம், குளிர் ஒருபுறம், எங்கு தங்குவது, யார் துணை என்ற கேள்விகளுக்கெல்லாம் பதில் கிடைக்காதவனாக உறக்கத்தில் உலாத்திக்கொண்டிருந்த அவனது மனது அமைதியை இழந்தது. உடலில் உதறல், உள்ளத்தில் உளரல்ளூ இனி மீண்டும் வீட்டுக்குப் போகனுமா? என்று அவனே தன் மனதில் கேட்டுக்கொண்டு 'வேண்டாம்' என பதிலும் சொல்லிக்கொண்டான். 

அப்படி என்றால் என்ன செய்வது என தன்னிடமே அவன் கேட்டக் கேள்விக்கு, 'தற்கொலை செய்துகொள்' என்ற பதிலையே அவனது மனது ரீங்கரித்துக்கொண்டிருந்தது. கையில் வைத்திருந்த துணிப்பையினை அருகாமையில் உள்ள ஒரு மரத்தில் தொங்கவிட்டுவிட்டு, தற்கொலைக்கு ஆயத்தமானான் ரவி. தகப்பன் தனக்குக் கொடுத்த சிறிய தண்டணைக்காக, தனக்குத் தானே இத்தனை பெரிய தண்டணையை கொடுக்கவேண்டுமா என்பதையெல்லாம் நினைக்க அவன்கு கணங்கள் இல்லை. தூக்கு மேடை கைதியைப் போலை தன்னையே அதில் ஏற்றிக்கொள்ள ஆயத்தமாகிக்கொண்டு, துக்கத்தோடு இருந்த ரவியை தூக்கம் தாலாட்டி தூங்கவைத்தது, தன்னையும் அறியாமல் தூங்கிக்கொண்டிருந்தான் ரவி. காலை 7 மணிளூ சூரியக் கதிர் தன் மேல் பட எழுந்துகொண்ட அவன் திடுக்கிட்டான்ளூ 'நான் சாகனும் என்றுதானே வந்தேன், எப்படி தூங்கினேன்' என்று விழித்த அவனது கண்களுக்கு முன்னால், சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் பட்டது. உல்லாசமாய், ஜோடியாய், குடும்பமாய், குழந்தைகளுடன் வந்த மக்களைக் கண்ட ரவி தனிமையை உணர்ந்தான். தனது தவற்றினை உணர்ந்து, வீட்டை நோக்கிப் பயணமானான் ரவிளூ வழியில் பழங்கால ஆலயம் ஒன்றின் படியில் அவனது கால்கள் முழங்காலிட்டது. மனம் இறைவனை நோக்கிப் பார்த்தது, மௌனம் சற்று நேரம் நீடித்தது, அவனது வாழ்க்கையின் கருமேகங்களெல்லாம் கண்ணீராய் பொழிந்துகொண்டிருந்தது. ஆனால் அவனது மனதோ அமைதி அடைந்தது. பூட்டிய ஆலயத்தின் வெளியே நின்றிருந்தாலும் ரவியின் மனதிற்குள் இறைவன் நுழைந்திருந்தார். ரவி தற்கொலை செய்துகொள்ளவில்லை ஆனால், இறைவனின் சந்நிதியில் தன்னைக் கொலை செய்திருந்தான். அன்று அவனுக்குப் பிறந்த நாள். சாவு அவனுக்கு நிஜமாகாமல் நிழலானது. தன்னைக் காப்பாற்றியது இயற்கையான தூக்கமல்ல இறைவன் என்பதை உணர்ந்த அவனது வாழ்க்கை சூரியனைப் போல பிரகாசமானது. 

இடிந்து போனதற்காக இடித்துக்கொள்வதும்
அடிக்கப்பட்டதற்காக அழித்துக்கொள்வதும்
துக்கத்தை மறக்கத் தூக்கில் தொங்குவதும்
கண்ணீருக்கு விடையாய் கல்லறையை நினைப்பதும் ஏன்? 
வல்லவரை நினைத்து வா! அவர் வாழவைப்பார். 



கடலில் கரைந்த கன்னி!


கடலில் கரைந்த கன்னி!



சூரியன் மெல்ல மெல்ல மேற்கில் தன் கதிர்களைக் சுருக்கிக்கொண்டு மறைந்துகொண்டிருந்தபோது, அதனைப் பார்க்க மனதில்லாதவன் போல கிழக்கு திசையில் உள்ள கடலையே வைத்த கண் எடுக்காமல் பார்த்துக்கொண்டிருந்தான் அந்த வாலிபன். ஏறக்குறைய இருபத்து மூன்று வயது இருக்கும். எடுப்பான தோற்றம், மாநிறம், நல்ல குடும்பத்தைச் சேர்ந்த படித்த வாலிபன். கடற்கரையில் காற்று வாங்கும்படி வந்த பலரது இரைச்சல்கள் அந்த வாலிபனின் சிந்தையை சிதறடிக்கவில்லை. எதையோ ஆழ்ந்து சித்தித்தவன் போல, எதையோ இழந்துவிட்டவன் போல, தனிமை தான் இனி கதி என்ற மனதுடன் மண் தரையில் அமர்ந்திருந்தான். கடற்கரை மணலில் அவனது விரல்கள் யாரும் புரியா புதிராக சில கோலங்களை வரைந்துகொண்டிருந்தன. தனக்கு மேலே எழுதப்பட்டபோதிலும் மண்ணினால் கூட விளங்க இயலாத வரிகள் அவை. கடலில் ஆடி ஆடி ஆரவாரிக்கும் அலைகளை அவனது விழிகள் விரித்துப் பார்த்துக்கொண்டிருந்தன. அப்படி என்ன தேடினால் கடலலையில்? என்ன நடந்தது அவனது வாழ்க்கையில்? 

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு குடும்பத்தை விட்டு பிரிந்து முதன் முறையாக பட்டணத்தை நோக்கிப் பயணமானவன் அவன். பொறியியல் கல்லூரியில் முதலாமாண்டு சேர்க்கை பெறவே கிராமம் அவனை பட்டணத்திற்கு வழிவிட்டனுப்பியிருந்தது. கிராமத்து மண்ணிலிருந்து பட்டணத்திற்கு வந்த அவனுக்கு பட்டணத்தின் கலாச்சாரத்துடன் இணைந்து செல்லவே பல மாதங்கள் பிடித்தது. பட்டணத்தின் பகட்டைக் கண்டதும் அதில் மயங்கி, பட்டணத்தில் தான் பிறந்திருக்கக் கூடாதா? எனது பெற்றோர் ஏன் கிராமத்தில் வாழுகின்றார்கள்? என்ற சிந்தை அவனது மனதை சிறைப்பிடித்திருந்தது. பட்டணத்து வாலிபர்களின் உடைகளும், உறவுகளும் இவனுக்கு தொடக்கத்தில் தன்னை மிகவும் தாழ்;த்திப் பார்க்கச் செய்தன. அவர்களைப் போல வாழவேண்டும் என விருப்பம்? ஆனால் தொடங்குவது எப்படி? நண்பனாக என்னை யார் ஏற்றுக்கொள்ளுவார்கள்? என்ற கேள்விகள் அவனது மனதில் சந்தேகத்தையே விதைத்துக்கொண்டிருந்தன. பெற்றோரை விட்டுப் பிரியவே தொடக்கத்தில் மனதில்லாத அவனது பாசத்தை பட்டணத்துக் காற்று நாளுக்கு நாள் வாரிச் சுருட்டிக்கொண்டுபோனது. 

ஏங்க மொவன் கிட்டயிருந்து கடுதாசி ஏதாச்சும் வந்துச்சா? என கிராமத்தில் அவனது தாய் தனது கணவனிடம் கேட்க, 'நானும் அன் கடுதாசிக்குத்தான் காத்துட்டுருக்கேன்' என்ற பதில் தான் விடையானது தாய்க்கு. மகனைக் குறித்து பெற்றோர் ஏங்கிக்கொண்டிருக்க, பெற்றோரைக் குறித்த நினைவு இவனுக்கு மங்கிக்கொண்டிருந்ததுளூ ஒரு கட்டத்தில் அது மறைந்து மயானத்தை நோக்கியும் பயணித்துவிட்டது. இதற்கு காரணம் அவன் பட்டணத்தில் வாழ்ந்த வாழ்க்கைதான். 

கல்லூரியில் தனிமையாகத் தொடங்கிய அவனுக்கு நாட்கள் சிலவற்றிலேயே நட்புகள் வளரத்தொடங்கியது. கிராமத்தை மறைத்து தான் பட்டணத்துக்காரன் என்பதை நிரூபிக்கும்படியாக அவன் ஆடைகள் முதல் அங்கங்கள் வரையிலும் முயற்சித்துக்கொண்டிருந்தான். அவனது உடையிலும், உள்ளத்திலும் பட்டணம் ஏறியது. பெற்றோரின் பயம் அற்ற சூழ்நிலைளூ தானே ராஜா என்ற மதி மயக்கம் அவனை தன்னிடம் இழுத்துக்கொண்டது. கெட்ட நண்பர்களின் ஐக்கியம், சகவாசம் மெல்ல மெல்ல அவனைச் சடலமாக்கப் போகின்றன என்பதை அறியாமல் அவர்களுடனான உறவில் உல்லாசம் கொண்டாடத்தொடங்கினான். போதைக்கு அடிமைளூ திரையரங்கே வீடு எனத் திரிந்தவனை மேலும் ஒரு வலை சுண்டி இழுத்துக்கொண்டது.....

நண்பர்கள் மத்தியில் நாட்களைக் கடத்திய அவன் ஒரு நண்பியின் நகையில் (சிரிப்பில்) நாட்களைக் கழிக்கத் தொடங்கினான். தொடக்கத்தில் உடன் கல்லூரி மாணவியாக வலம் வந்த அவளின் செம்பழுப்பு நிறமும், பழுப்பேறிய கருங் கூந்தலும் இவனை அவளது ரசிகனாக்கியவைகள். பேசிப் பழகும் தூரம் வராதா என ஏங்கிக்கொண்டிருந்த இவனது நெஞ்சம், ஒரு முறை அவள் தன்னிடத்தில் ஒரு உதவி கேட்க வந்தபோது அவளது பேச்சிலேயே தாகம் தணித்துக்கொண்டது. அவளுக்காக எல்லாவற்றையும் விட்டுக்கொடுத்தான், அனுப்பிய பெற்றோரை மறந்து, ஆங்காங்கே நின்றான் அவளது தரிசனம் காணளூ தங்கிய அறைகளிலெல்லாம் தொங்கியது அவளது புகைப்படங்கள்தான்ளூ  உடன் மாணவியாய்ப் பார்த்த அவளிடம் சகோதரனைப் போல ஏய்த்துப் பழகியதால் அவள் கபடமில்லாத உறவில் அவனோடு நெருங்கிப் பழகினாள். 'நான் உன்னை காதலிக்கிறேன்' என்று அவளிடம் சொல்வதற்காக அவன் உதட்டைப் பிதுக்கிப் பிதுக்கிப் கைகளைப் பிசைந்துகொண்டிருந்தபோதிலும் அவனது அங்க மொழிகளை அவள் அறிந்துகொள்ளவில்லை. ஒரு முறை தன்னிடத்தில் ஒரு உதவிக்காக வந்திருந்த அவளுக்கு மயக்க மருந்துகளைக் கொடுத்து தனது உடலின் விருப்பத்தை நிறைவேற்றிக்கொண்டான். விழித்தெழுந்த அவள் வாழ மனமின்றி அவனது தடுப்புகளையும் மீறி ஓடிச் சென்றாள் கடற்கரைக்குளூ ஆறுகள் சங்கமமாகும் கடலில் தற்கொலை செய்து தன்னையும் சங்கமமாக்கினாள். 

மாணவியை மனைவியாக்க நினைத்து, அவளது உடலை உருக்குலைத்துவிட்டு, கடலில் கரைந்துபோன கன்னியை நினைத்து கடற்கரையிலே உடைந்துபோய் உட்கார்ந்திருப்பதையே தனது வாழ்க்கையாக்கிக்கொண்டான் அந்த வாலிபன். வாழவேண்டிய வயதில்ளூ ஒருத்தி வாழ்க்கையைக் கெடுத்ததால் இவனது வாழ்க்கையும் கெட்டுப்போனது. பெற்றோரை நினைவலைகளை விட்டு அகற்றிவிட்டு, கடற்கரையிலே தினமும் அந்தப் பெண்ணுக்காக நினைவு நாள் தியானம் செய்துகொண்டிருந்தது அவன் மனது. கடலில் கரைந்த பெண்னையே நினைத்து நினைத்து கருகிப்போனதுதான் அவனுக்கு மிஞ்சியது. 

இயேசுவின் அன்பிற்கு முன்னால் 
முந்துவதில்லை இவ்வுலகத்தின் அன்பு
சிந்தையை சீரழிக்கும் உறவுகளால்
உணர்விழந்தால் வாழ்வே உதிர்ந்துவிடும் 

பெற்றவரைப் பிரிந்தால் நீதான் மற்றவன்
முற்றும் கற்க நீ முடங்கினால் போதும்
போதையில் வாழ உன் வாழ்வே முற்றும்
அன்பிற்கு அலையாதே அன்பரண்டை ஓடிவா! 


நீங்கள் அப்பமல்லாததற்காகப் பணத்தையும், திருப்திசெய்யாத பொருளுக்காக உங்கள் பிரயாசத்தையும் செலவழிப்பானேன்? நீங்கள் எனக்குக் கவனமாய்ச் செவிகொடுத்து, நலமானதைச் சாப்பிடுங்கள்ளூ அப்பொழுது உங்கள் ஆத்துமா கொழுப்பான பதார்த்தத்தினால் மகிழ்ச்சியாகும்.(ஏசா 55:2)

ஐயோ பசிக்குதே!

ஐயோ பசிக்குதே!



எங்கு பார்த்தாலும், கடல் நீர் ஆரவாரித்துக்கொண்டிருந்தது. அலைகளின் ஆனந்த நடனத்தில் கப்பலும் இசைந்தே ஆடிக்கொண்டிருந்தது. பயணிகள் அனைவரும் ஆனந்தமாய் தனது கப்பற் பயணத்தை அனுபவித்துக்கொண்டிருந்தனர். அத்தனை பேரின் ஆனந்தமும், அங்கிருந்த ஒரு மனிதரின் சோகத்தை மாற்றவில்லை. சோகமாயிருந்த அந்த மனிதர் பசியால் களைத்துப்போயிருந்தார். கப்பலில் ஏறியது முதல், எதுவும் உண்ணாமல், யாரிடமும் கேட்காமல் தனிமையில் அமைதியாகப் பயணித்துக்கொண்டிருந்தார்ளூ அதுதான் அவரது வாழ்வின் முதல் கப்பல் பயணம். கப்பல் பயணச் சீட்டு அவருக்கு வேறாருவரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அவரது கையிலோ காசு ஏதும் கொடுக்கப்படவில்லை. எனவே உணவு உண்ண கப்பலில் உள்ள உணவகத்தில் காசு கொடுக்க வேண்டுமோ எனக் கருதி உணவு வாங்கச் செல்லாமல் தனித்தே இருந்தார். எல்லாரும் வயிறார உண்டு களித்திருக்கும்போது, இவரோ பசியால் துடித்துக்கொண்டிருந்தார். இரண்டு நாட்கள் கழிந்தனளூ பசியினை அடக்கமுடியாதவராக, உணவகத்தின் உள்ளே சென்றார். அங்கே அவருக்கு அமோக வரவேற்பு, அரச மரியாதையுடன் உணவு வழங்கப்பட்டது. பயந்து பயந்து உண்டவர் மெல்ல வெளியேறும்போது, அங்கே இருந்த வேலையாள் ஒருவரிடம் 'காசு கொடுக்கவேண்டுமா?' என விசாரித்தார். அந்த வேலையாள் சிரித்தார்ளூ ஒன்றும் புரியாத நிலையில் இருந்த அந்த பயணியிடம் 'ஐயா, உங்கள உணவுக்கான காச பயணச் சீட்டு பெறும்போதே செலுத்தப்பட்டிருக்கின்றது' என்றார். திடுக்கிட்ட அந்த பயணி, தனது அறியாமையை நினைத்து நொந்துகொண்டார்.

நாம் பாவத்தில் மரிக்கவேண்டிய அவசியமில்லை நமது பாவங்களுக்காக சிலுவையில் விலைக்கிரயம் செலுத்தப்பட்டுவிட்டது.

நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்ளூ நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்ததுளூ அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்.(ஏசா 53:5)