Thursday 23 February 2012

ஐயோ பசிக்குதே!

ஐயோ பசிக்குதே!



எங்கு பார்த்தாலும், கடல் நீர் ஆரவாரித்துக்கொண்டிருந்தது. அலைகளின் ஆனந்த நடனத்தில் கப்பலும் இசைந்தே ஆடிக்கொண்டிருந்தது. பயணிகள் அனைவரும் ஆனந்தமாய் தனது கப்பற் பயணத்தை அனுபவித்துக்கொண்டிருந்தனர். அத்தனை பேரின் ஆனந்தமும், அங்கிருந்த ஒரு மனிதரின் சோகத்தை மாற்றவில்லை. சோகமாயிருந்த அந்த மனிதர் பசியால் களைத்துப்போயிருந்தார். கப்பலில் ஏறியது முதல், எதுவும் உண்ணாமல், யாரிடமும் கேட்காமல் தனிமையில் அமைதியாகப் பயணித்துக்கொண்டிருந்தார்ளூ அதுதான் அவரது வாழ்வின் முதல் கப்பல் பயணம். கப்பல் பயணச் சீட்டு அவருக்கு வேறாருவரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அவரது கையிலோ காசு ஏதும் கொடுக்கப்படவில்லை. எனவே உணவு உண்ண கப்பலில் உள்ள உணவகத்தில் காசு கொடுக்க வேண்டுமோ எனக் கருதி உணவு வாங்கச் செல்லாமல் தனித்தே இருந்தார். எல்லாரும் வயிறார உண்டு களித்திருக்கும்போது, இவரோ பசியால் துடித்துக்கொண்டிருந்தார். இரண்டு நாட்கள் கழிந்தனளூ பசியினை அடக்கமுடியாதவராக, உணவகத்தின் உள்ளே சென்றார். அங்கே அவருக்கு அமோக வரவேற்பு, அரச மரியாதையுடன் உணவு வழங்கப்பட்டது. பயந்து பயந்து உண்டவர் மெல்ல வெளியேறும்போது, அங்கே இருந்த வேலையாள் ஒருவரிடம் 'காசு கொடுக்கவேண்டுமா?' என விசாரித்தார். அந்த வேலையாள் சிரித்தார்ளூ ஒன்றும் புரியாத நிலையில் இருந்த அந்த பயணியிடம் 'ஐயா, உங்கள உணவுக்கான காச பயணச் சீட்டு பெறும்போதே செலுத்தப்பட்டிருக்கின்றது' என்றார். திடுக்கிட்ட அந்த பயணி, தனது அறியாமையை நினைத்து நொந்துகொண்டார்.

நாம் பாவத்தில் மரிக்கவேண்டிய அவசியமில்லை நமது பாவங்களுக்காக சிலுவையில் விலைக்கிரயம் செலுத்தப்பட்டுவிட்டது.

நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்ளூ நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்ததுளூ அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்.(ஏசா 53:5)

No comments:

Post a Comment